ஆய்வுக்கூட்டம்
விருதுநகர்:விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குனர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் கலெக்டர் சுகபுத்ரா முன்னிலையில் குடிநீர் வடிகால் வாரிய திட்ட பணிகளின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடந்தது. இதில் தலைமை பொறியாளர் கணேசன், திட்ட இயக்குனர் தண்டபாணி, நிர்வாக பொறியாளர் கற்பகம், நகராட்சி கமிஷனர்கள், பொறியாளர்கள், உதவி இயக்குனர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.