உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / சிந்தனைகளை நம்பிக்கையுடன் செயலாக்கும் போது வெற்றி பெறலாம்

சிந்தனைகளை நம்பிக்கையுடன் செயலாக்கும் போது வெற்றி பெறலாம்

சிவகாசி: மனதை மகிழ்ச்சியாக வைத்திருக்கும் போது புதுப்புது சிந்தனைகள் தோன்றும், அதை ஆர்வம் குறையாமல் நம்பிக்கையுடன் செயலாக்கும் போது வாழ்வில் வெற்றியும் வளமும் வந்து சேரும் என ஏர்செல் நிறுவனர் சிவசங்கரன் பேசினார்.சிவகாசி பி.எஸ்.ஆர்., பொறியியல் கல்லுாரி, பி.எஸ்.ஆர்.ஆர்., பொறியியல் கல்லுாரி மாணவர்களுக்கு மகிழ்ச்சி வெற்றி , செல்வம் என்ற தலைப்பில் ஊக்கமளிக்கும் நிகழ்ச்சி நடந்தது.பி.எஸ்.ஆர்., கல்வி குழுமம் இயக்குனர்கள் அருண்குமார், விக்னேஸ்வரி முன்னிலை வகித்தனர். கல்லுாரி முதல்வர் செந்தில்குமார் வரவேற்றார். டீன் மாரிசாமி வாழ்த்தினார். சென்னை சிவா வெண்ட்சர்ஸ் லிமிடெட் ஏர்செல் டிஷ்நெட் டி.எஸ்.எல்., நிறுவனர் சிவசங்கரன் பேசியதாவது, மனநிலை தான் ஒரு மனிதனின் வாழ்க்கையை நிர்ணயிக்கிறது.நேர்மறை எண்ணங்கள் வெற்றிக்கு வழிவகுக்கும். கடமையை செய்தால் வெற்றி, கடமைக்கு செய்தால் தோல்வி. மனதை மகிழ்ச்சியாக வைத்திருக்கும் போது புதுப்புது சிந்தனைகள் தோன்றும். அதை ஆர்வம் குறையாமல் நம்பிக்கையுடன் செயலாக்கும் போது வாழ்வில் வெற்றியும் வளமும் வந்து சேரும், இவ்வாறு அவர் பேசினார். தொடர்ந்து, கேள்விகளுக்கு பதில் அளித்த மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினார்.ஆர்த்தி மருத்துவமனை ஸ்கேன்ஸ் நிறுவனர்கள் கோவிந்தராஜன், கோமதி, ஜெயவிலாஸ் குரூப்ஸ் நிறுவனர் கண்ணன், கிருஷ்ணவேணி, கமலா மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை நிறுவனர்கள் சம்பத், கமலா மாரியம்மாள், பத்மா மருத்துவமனை ராஜேந்திரன், பத்மா கலந்து கொண்டனர். பி.எஸ்.ஆர்.ஆர்., பொறியியல் கல்லுாரி முதல்வர் பாலசுப்பிரமணியன் நன்றி கூறினார். ஏற்பாடுகளை கல்லுாரி நிர்வாகம் பி.எஸ்.ஆர்., கல்வி குழுமங்கள் பேராசிரியர்கள் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை