உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / போலீஸ் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டவர் தற்கொலை உறவினர்கள் மறியல்: பஸ் கண்ணாடி உடைப்பு

போலீஸ் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டவர் தற்கொலை உறவினர்கள் மறியல்: பஸ் கண்ணாடி உடைப்பு

காரியாபட்டி: விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் டூவீலர் திருட்டு வழக்கில் சந்தேகத்தின் பேரில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டவரிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்ததால் தற்கொலை செய்து கொண்டார். காரியாபட்டி அச்சம்பட்டி அழகுபாண்டி 35. மூன்று மாதங் களுக்கு முன் அப்பகுதியில் டூவீலர் காணாமல் போன வழக்கில் சி.சி.டிவி., கேமராவை ஆய்வு செய்த போலீசார், திருடியவரிடம் அழகு பாண்டி பேசிக் கொண்டிருந்தது தெரிந்தது என கூறி சில நாட்களுக்கு முன் சந்தேகத்தின் பேரில் அவரிடம் போலீசார் விசாரித்தனர். விசாரணைக்கு கூப் பிடும் போது வந்து செல்ல வேண்டும் எனவும் தெரிவித்தனர். நேற்று முன்தினம் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து அழகுபாண்டி தற்கொலை செய்து கொண்டார். பணம் கேட்டு தொந்தரவு செய்ததால் மன உளைச்சலில் அழகுபாண்டி தற்கொலை செய்ததாகவும், காரணமான மேலக்கள்ளங்குளம் அர்ஜுனனை கைது செய்யக்கோரியும் உறவினர்கள் போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டனர். முக்கு ரோட்டில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சங்கர் விசாரித்தார் உண்மை இருக்கும் பட்சத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததையடுத்து உறவினர்கள் கலைந்து சென்றனர். பஸ் கண்ணாடி உடைப்பு அழகுபாண்டியை தற்கொலைக்கு துாண்டிய அர்ஜுனனை கைது செய்யக்கோரி முக்கு ரோட்டில் இறந்தவரின் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் மறியலில் ஈடுபட்டனர். மதுரை சென்ற அரசு டவுன் பஸ்சை கல்லால் எறிந்து கண்ணாடியை உடைத்தனர். அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். ஏ.எஸ்.பி., மதிவாணன் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை