உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / நிலையான வளர்ச்சி இலக்குகளில் இந்திய அளவில் தமிழகம் முன்னேற்றம் அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்

நிலையான வளர்ச்சி இலக்குகளில் இந்திய அளவில் தமிழகம் முன்னேற்றம் அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்

சிவகாசி: ஐ.நா., சபையின் சுற்றுச்சூழல் திட்டம் மற்றும் நிலையான வளர்ச்சி இலக்குகளில் இந்திய அளவில் தமிழகம் முன்னேற்றத்தில் உள்ளது என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.சிவகாசியில் இது குறித்து மேலும் அவர் கூறியதாவது, சிவகாசி சுற்றுச்சாலை திட்டத்தில் 10 கிலோ மீட்டர் துாரத்திற்கான ஒரு பகுதிக்கான டெண்டர் வெளியிடப்பட்டு உள்ளது. அடுத்த பகுதிக்கான நிலை எடுப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. காலநிலை மாற்றம் என்பது தமிழகம் இந்தியா மற்றும் உலகளாவிய பிரச்னையாக உள்ளது. மாசு ஏற்படுவதை குறைப்பதற்காக, சுற்றுச்சூழலை காப்பதற்கான சுற்றுச்சூழல் துறை, மாசுக்கட்டுப்பாட்டு துறை சார்பில் தொடர் நடவடிக்கைகளை தமிழக அரசு முன்னெடுத்து வருகிறது.நான் சுற்றுச்சூழல் துறை அமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் தொடர் ஆய்வுகளை மேற்கொண்டு தமிழகம் முழுவதும் சூழல் மேம்பாட்டு திட்டங்களை விரைந்து செயல்படுத்த உத்தரவிட்டுள்ளேன். ஐ.நா., சபையின் சுற்றுச்சூழல் திட்டம், நிலையான வளர்ச்சி இலக்குகளில் இந்திய அளவில் தமிழகம் முன்னேற்றத்தை பெற்றுள்ளது. அதை தொடர்ந்து தக்க வைக்க, மேலும் முன்னேற்றம் காண்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை