ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
விருதுநகர்: விருதுநகர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தில் முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழகம், இடை நிலை ஆசிரியர் சங்கம், உடற்கல்வி ஆசிரியர், இயக்குனர் சங்கம், உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்கம் சார்பில் திருத்தங்கல்லில் அரசு மேல்நிலைப்பள்ளியில் போதை மாணவர்களால் ஆசிரியர் சண்முகசுந்தரம் தாக்கப்பட்டதை கண்டித்தும், ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மாவட்ட தலைவர் வாஞ்சி நாதன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் மாநில அமைப்புச் செயலாளர் முத்தையா, பொருளாளர் கார்த்திகேயன், பொது செயலாளர் அன்பழகன் உள்பட பலர் பங்கேற்றனர்.