உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / டெக்னோவிஷன் கருத்தரங்கம்

டெக்னோவிஷன் கருத்தரங்கம்

விருதுநகர்: விருதுநகர் காமராஜ் பொறியியல் கல்லுாரியில் டெக்னோவிஷன் 2025 எனும் கருத்தரங்கம் நடந்தது.கல்லுாரி முதல்வர் செந்தில் வரவேற்றார். கல்லுாரி செயலாளர் தர்மராஜன் தலைமை வகித்தார். பல்வேறு துறைகளை சேர்ந்த மாணவர்களால் 100க்கும் மேற்பட்ட திட்டங்கள் உருவாக்கப்பட்டு, அவற்றில் இருந்து டெக்னோவிஷனில் காட்சிப்படுத்த 50 சிறந்த திட்டங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன.கொச்சி பாதுகாப்பு ஆராய்ச்சி, மேம்பாட்டு நிறுவனத்தின் முன்னாள் இணை இயக்குனர் துர்காதாஸ், விஞ்ஞானி சுதர்சன்,சென்னை ஐ.ஐ.டி., முன்னாள் இயக்குனர் நடராஜன், கொச்சி கடற்படை இயற்பியல், கடல்சார் ஆய்வகத்தின் முன்னாள் விஞ்ஞானி பூமிநாதன் பேசினர். மாணவர்கள் தங்களது ஆய்வுரைகளை வழங்கினர். கல்லுாரி தலைவர் புகழேந்தி பாண்டியன் நன்றி கூறினார். உதவி பேராசிரியர்கள் வேலுமணி, அசோக், மகாலட்சுமி, மோகனா ஆகியோர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை