மேலும் செய்திகள்
டிரான்ஸ்பார்மரில் துாக்கிட்டு ஆய்வாளர் தற்கொலை
17-Sep-2024
ராஜபாளையம்: விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் லட்சுமணன் பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்தவர் மணிகண்டன், 27. இவரது சகோதரர் அருண்குமார், 31; நண்பர்கள் வெங்கட்ரமணன், 30, முத்துக்குமார், 30, அபிநவ், 29. இவர்கள் ஐந்து பேரும் ஸ்ரீவில்லிபுத்துார் ஹோட்டலில் சாப்பிட்டு விட்டு, காரில் நேற்று முன்தினம் நள்ளிரவு ராஜபாளையம் திரும்பினர்.வெங்கட்ரமணன் காரை ஓட்டினார். புதுப்பட்டி விலக்கு சடையால் ஆற்று பாலம் அருகே நாய் குறுக்கே வந்ததால், காரை திருப்பியதில் பள்ளத்தில் விழுந்து மின்கம்பத்தில் மோதி நின்றது.இதில், மணிகண்டன் சம்பவ இடத்திலேயே பலியானார். அருண்குமார், முத்துக்குமார், அபினவ் பலத்த காயமடைந்து மதுரை, திருநெல்வேலி மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
17-Sep-2024