உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / பஸ் ஸ்டாண்டில் சேதமான தரை தளம் தேங்கும் மழை நீரால் அவதி

பஸ் ஸ்டாண்டில் சேதமான தரை தளம் தேங்கும் மழை நீரால் அவதி

சிவகாசி : சிவகாசி பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் தரை தளம் சேதமடைந்திருப்பதோடு மழை நீரும் தேங்கி இருப்பதால் பயணிகள் அவதிப்படுகின்றனர்.சிவகாசி பஸ் ஸ்டாண்டிற்கு தினமும் 200 க்கும் மேற்பட்ட முறை பஸ்கள் வந்து செல்கின்றன. இந்நிலையில் பஸ் ஸ்டாண்டில் பஸ் நிறுத்துமிடம், தரைதளம் சேதம் அடைந்துள்ளது. ஏழு ஆண்டுகளுக்கு முன்பு பஸ் ஸ்டாண்டில் விரிவாக்க பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இதில் பஸ் ஸ்டாண்ட் வளாகம் சீரமைக்க பட்டது. ஆனால் தற்போது பஸ் ஸ்டாண்டில் தரைதளம் சமமாக இல்லாமல் ஆங்காங்கே சேதம் அடைந்துள்ளது. கற்கள் பெயர்ந்து இருப்பதால் வாகனங்கள் செல்வதிலும் சிரமம் ஏற்படுகின்றது. தவிர பஸ் வரும் போது அவசரமாக ஏறுவதற்கு ஓடிச்செல்லும் பயணிகள் இடறி விழுகின்றனர்.மேலும் மழைக்காலங்களில் சேதம் அடைந்த இடங்களில் தண்ணீர் தேங்கி பஸ்கள் செல்லும்போது அடிக்கப்பட்டு பயணிகள் மீது தெறிக்கிறது. தவிர நீண்ட நாட்கள் தண்ணீர் தேங்கி இருப்பதால் கழிவுநீராகி கொசு உற்பத்தி கேந்திரமாக மாறி விடுகின்றது. எனவே பஸ் ஸ்டாண்டில் சேதமடைந்த பகுதிகளை சீரமைத்து மழைநீர் வெளியேற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ