உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / சேதம் அடைந்த ரேஷன் கடை புதிய கட்டடம் கட்ட எதிர்பார்ப்பு

சேதம் அடைந்த ரேஷன் கடை புதிய கட்டடம் கட்ட எதிர்பார்ப்பு

காரியாபட்டி: ரேஷன் கடை கட்டி 25 ஆண்டுகளுக்கு மேல் ஆனதால் கூரை சேதம் அடைந்து, சுவர்கள் விரிசல் ஏற்பட்டு, சிமென்ட் பூச்சு விழுவதால் புதிய கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.காரியாபட்டி வடக்கு புளியம்பட்டியில் 25 ஆண்டுகளுக்கு முன் ரேஷன் கடை கட்டப்பட்டது. 500க்கும் மேற்பட்ட கார்டுதாரர்கள் உள்ளனர். நாளடைவில் கட்டடம் வலுவிழந்து கூரை சிமென்ட் பூச்சு பெயர்ந்து கம்பிகள் தெரிகின்றன. பக்கவாட்டு சுவர்கள் விரிசல் அடைந்தன.மழைக்கு கசிவு ஏற்பட்டு பொருட்கள் நாசமாகின்றன. கூரையிலிருந்து விழும் சிமென்ட் கலவைகள் உணவு பொருட்கள் மீது விழுந்து பாழாகின்றன. இதனால் அந்த பொருள்களை வாங்குபவர்கள் பாதிக்கப்படுகின்றனர். விரிசல்களுக்குள் விஷப்பூச்சிகள் தங்குகின்றன. இதனை கருத்தில் கொண்டு புதிய கட்டடம் கட்ட வேண்டுமென மக்கள் விரும்புகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ