பா.ஜ.,யாத்திரை கனவு பலிக்காது
சாத்துார்: பா.ஜ., யாத்திரை கனவு தமிழகத்தில் பலிக்காது. ஒவ்வொரு முறை யாத்திரை சென்ற போது அவர்கள் தோல்வியை சந்தித்து வருகின்றனர் ,என மாணிக்கம் தாகூர் எம்.பி கூறினார். சாத்தூர் ரயில் நிலையத்தை ஆய்வு செய்த அவர் மேலும் கூறியதாவது: கோவிட் முன்பு சாத்துாரில் திருச்செந்துார், கன்னியாகுமரி, தாதர், ராமேஸ்வரம், செங்கோட்டை,ஆகிய எக்ஸ்பிரஸ் ரயில்கள் தற்போது நின்று செல்வதில்லை இதனால் பயணிகள் பாதிக்கப்படுகின்றார்கள். ரயில்கள் மீண்டும் நின்று செல்ல வேண்டுமென அதிகாரிகளிடமும் ரயில்வே துறை அமைச்சரிடமும் வலியுறுத்தப்படும்.தவறும் பட்சத்தில் காங்கிரஸ் கட்சி போராட்டம் செய்வோம்.கரூர் பிரச்சனையில் உயர் நீதிமன்றம் சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது .காங்கிரஸ் கட்சி நீதிமன்ற தீர்ப்பை மதிக்கும். மத்திய அமைச்சர் அமித்ஷா கையில் சி.பி.ஐ.,உள்ளது. இதனால் நியாயம் கிடைக்குமா என்ற சந்தேகம் உள்ளது. என்றார்.