உயருது உருட்டு உளுந்தும் பருப்பு குறையுது மல்லி, குண்டூர் வத்தல்
விருதுநகர்: விருதுநகர் மார்கெட்டில் உருட்டு உளுந்தம் பருப்பு நாடு 100 கிலோவிற்கு ரூ.450 உயர்ந்து ரூ.9700, மல்லி நாடு 40 கிலோவிற்கு ரூ.1500 முதல் ரூ.1800 குறைந்து ரூ.3500 முதல் ரூ.4300, குண்டூர் வத்தல் 100 கிலோவிற்கு ரூ.500 முதல் ரூ.2000 குறைந்து ரூ.13,500 முதல் ரூ.14,500 என விற்கப் படுகிறது. இங்கு க.எண்ணெய் 15 கிலோ ரூ.2600, ந.எண்ணெய் 15 கிலோ ரூ.5940, பாமாயில் 15 கிலோவிற்கு ரூ.5 உயர்ந்து ரூ.2030, மைதா 90 கிலோ ரூ.4670, சர்க்கரை 50 கிலோவிற்கு ரூ.10 உயர்ந்து ரூ.2250, ரவை 30 கிலோ ரூ.1540, பொரிகடலை 50 கிலோ ரூ.4400, கொண்டைக்கடலை 100 கிலோ ரூ.6500 என விற்கப்படுகிறது. துவரம் பருப்பு புதுசு லயன் 100 கிலோவிற்கு ரூ.100 உயர்ந்து ரூ.9,800 முதல் ரூ.10,000, உளுந்து லயன் 100 கிலோவிற்கு ரூ.200 முதல் ரூ.300 உயர்ந்து ரூ.7200 முதல் ரூ.7700, பாசிப்பருப்பு 100 கிலோவிற்கு ரூ.100 உயர்ந்து ரூ.9350 முதல் ரூ.9450, தொலிபருப்பு 100 கிலோவிற்கு ரூ.100 உயர்ந்து ரூ.9100, பட்டாணி பருப்பு 100 கிலோ ரூ.3900 முதல் ரூ.4000, உளுந்து நாடு ரூ.7200 முதல் ரூ.7400 என விற்கப்படுகிறது. பாசிப்பயறு லயன் மீடியம் 100 கிலோவிற்கு ரூ.100 உயர்ந்து ரூ.7500, மல்லி லயன் 40 கிலோ ரூ.3550 முதல் ரூ.3700, முண்டு வத்தல் ரூ.16,000 முதல் ரூ.20,000, வத்தல் நாடு ரூ.12,000 முதல் ரூ.14,000, கடலை புண்ணாக்கு 100 கிலோ ரூ.4100, எள் புண்ணாக்கு 50 கிலோ ரூ.2100 என விற்கப்படுகிறது.