உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / அதிக முறை ஓட்டு போட்டவர்கள் கவுரவிப்பு

அதிக முறை ஓட்டு போட்டவர்கள் கவுரவிப்பு

விருதுநகர்: விருதுநகர் அழகாபுரியில் மூத்த வாக்காளர்களை கவுரவிக்கும் நிகழ்வு நடந்தது. மாவட்ட தேர்தல் அலுவலர் ஜெயசீலன் தலைமையில் நுாறு சதவீத ஓட்டளிப்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடந்தன. இதில் அழகாபுரியில் ஊராட்சி அலுவலகம், ரேஷன் கடை, வி.ஏ.ஓ., அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் சென்று வாக்களிப்பதன் அவசியம் குறித்தும், பணம், பரிசு பொருட்கள் பெற்று வாக்களிக்க கூடாது என்பது குறித்தும், விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஸ்டிக்கர்களை ஒட்டி விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.அதிக முறை ஓட்டளித்தவர்களுக்கு சால்வை அணிவித்து பாராட்டினார். 85 வயதுக்கு மேல் உள்ள முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு தபால் ஓட்டு செலுத்தும் விண்ணப்பத்தையும் வழங்கினார். தாசில்தார் மகேஷ்வரி, பி.டி.ஓ., சூரியகுமாரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ