உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / துார்ந்துபோன வாறுகால்; மேடு, பள்ள சிமென்ட் ரோடு கரிசல்பட்டி ஊராட்சி மக்கள் அவதி

துார்ந்துபோன வாறுகால்; மேடு, பள்ள சிமென்ட் ரோடு கரிசல்பட்டி ஊராட்சி மக்கள் அவதி

சாத்துார்:' சாத்துார் ஊராட்சி ஒன்றியம் கரிசல்பட்டி ஊராட்சியில் முறையான ரோடு, வாறுகால் வசதி இன்றி மக்கள் அவதிப்படுகின்றனர்.கரிசல்பட்டி ஊராட்சியில் கரிசல்பட்டி, சண்முகபுரம், நைனாபுரம், செந்திலாபுரம் ஆகிய கிராமங்கள் உள்ளன. கரிசல்பட்டியில் மேலத்தெரு, நடுத்தெரு பகுதியில் மட்டுமே புதியதாக பேவர் பிளாக் ரோடு, கழிவுநீர் செல்ல வாறுகால் அமைக்கப்பட்டுள்ளது.இந்த வாறுகாலும் முழுமையாக கட்டப்படவில்லை. மழைநீர் செல்லும் ஓடைக்குள் கழிவு நீர் கலக்கும் படியாக விட்டுள்ளனர். மழை பெய்து ஓடையில் மழை நீர் பெருக்கெடுக்கும் போது கழிவு நீரும் கலந்து தேங்கி நிற்பதால் துர்நாற்றம் வீசுவதோடு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது.பொது சுகாதார வளாகம் இல்லாததால் திறந்தவெளி கழிப்பிடம் சர்வசாதாரணமாகி வருகிறது. சிறிய குறுக்கு தெருக்களில் ஆங்காங்கே சிமென்ட் ரோடு போடப்பட்டு உள்ளது. இந்த சிமென்ட் ரோடு சீராக இல்லை. ஒரு பகுதி உயர்ந்தும், ஒரு பகுதி தாழ்ந்தும் காணப்படுகிறது. நைனாபுரத்தில் புதியதாக கட்டப்பட்ட வாறுகாலில் குப்பை குவிந்துள்ளது. வாறுகால் கழிவை அள்ள ஆட்கள் வராத நிலையில் மக்கள் தாங்களாகவே வாறுகாலை சுத்தம் செய்து கொள்ளும் நிலை உள்ளது.துப்புரவு பணியாளர்கள் போதுமான எண்ணிக்கையில் இல்லாத நிலையில் மாதம் ஒருமுறை மட்டுமே துாய்மை பணிகள் நடப்பதால் ஊராட்சி பகுதியில் ஆங்காங்கே குப்பை குவிந்து காணப்படுகிறது.தற்போது ஊராட்சியில் இரண்டு துப்புரவு பணியாளர்கள், மூன்று துாய்மை காவலர்கள் மட்டுமே பணியில் உள்ளனர். இவர்களால் அனைத்து பகுதியையும் பராமரிக்க முடியவில்லை.வாரம் ஒரு முறை ஒவ்வொரு பகுதியாக சென்று குப்பைகளை சேகரித்தும் துாய்மை பணியிடம் ஈடுபட்டு வருகின்றனர்.கூடுதலாக துப்புரவு பணியாளர்களை நியமிக்க வேண்டும்.- முருகேஸ்வரி, குடும்பத்தலைவி.கரிசல்பட்டியில் முறையாக ரோடு வசதி செய்து தரப்படவில்லை.மேலும் ஒரே கட்டமாக சாலை அமைக்கும் பணியை செய்யாமல் பாதி பாதியாக செய்வதால் ஒரு பகுதி சீரமைக்கப்பட்டால் மற்றொரு பகுதி சேதமடைந்து விடும் நிலை உள்ளது. கரிசல்பட்டி நடுத்தெருவில் ரோடு வசதி அன்றி மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.- கருப்பசாமி, கூலித்தொழிலாளி.

ரோடு வசதியில்லை

ஊராட்சியில் இசேவை மைய கட்டடம் கட்டி காட்சி பொருளாக உள்ளது. பட்டா சிட்டா பதிவதற்கு ஏழாயிரம்பண்ணை அல்லது சாத்துார் செல்ல வேண்டியுள்ளது. நைனாபுரத்தில் நடுத்தெருவில் ரோடு வசதி இன்றி மக்கள் அவதிப்படுகின்றனர்.- மாரியம்மாள், குடும்பத் தலைவி.கரிசல்பட்டி ஊரில் இருந்து வரும் கழிவு நீர் முழுவதும் மேல தெரு வழியாக சென்று ஓடையில் கலந்து வருகிறது. தற்போது இந்த பகுதியில் உள்ள வாறுகால் துார்ந்து போன நிலையில் உள்ளதால் கழிவு நீர் முழுவதும் பாதையில் தேங்கி நிற்கிறது. தடையின்றி கழிவுநீர் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.- பரமசிவம், கூலித்தொழிலாளி.

பாதையில் கழிவுநீர் தேக்கம்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ