உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / காயல்குடி ஆற்றை ஆக்கிரமித்த சீமை கருவேல மரங்கள்

காயல்குடி ஆற்றை ஆக்கிரமித்த சீமை கருவேல மரங்கள்

சிவகாசி: வெம்பக்கோட்டை ஒன்றியம் எதிர்கோட்டை வழியாகச் செல்லும் காயல்குடி ஆற்றில் சீமைக் கருவேல மரங்கள் ஆக்கிரமித்து உள்ளதால் தண்ணீர் தேங்குவதற்கு வழி இன்றி குடிநீர் ஆதாரத்திற்கும், விவசாயத்திற்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து ராஜபாளையம், மாதாங்கோவில்பட்டி, புலிப்பாறைப்பட்டி, திருவேங்கடபுரம், நதிக்குடி, எதிர்கோட்டை வழியாக காயல் குடி ஆறு சென்று வெம்பக்கோட்டை அணையில் சேர்கிறது. இந்த ஆற்றை நம்பி மாதங்கோவில்பட்டி, புலிப்பாறைப்பட்டி, எதிர்கோட்டை பகுதிகளில் சோளம், நெல் உள்ளிட்ட பயிர்கள் பயிரிடப்படுகின்றது. தவிர கிணற்று பாசனத்திலும் விவசாயம் செய்யப்படுகிறது. இப்பகுதியினருக்கு குடிநீர் ஆதாரமாகவும் பயன்படுகின்றது. இந்நிலையில் ஆறு முழுவதுமே இடைவெளி இன்றி சீமைக் கருவேல மரங்கள் ஆக்கிரமித்துள்ளது. இதனால் மழை பெய்தாலும் தண்ணீர் செல்வதற்கு வழி இல்லாததோடு, நிலத்தடி நீர் உறிஞ்சப்படுகின்றது. இந்த ஆற்றை நம்பி விவசாயம் செய்யும் விவசாயிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர். குடிநீர் ஆதாரத்திற்கும் வேட்டு வைக்கிறது. எனவே காயல் குடி ஆற்றில் ஆக்கிரமித்துள்ள சீமைக் கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ