உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / முகவூர் மெயின் ரோட்டில் கண் துடைப்பாக நடந்த பணி

முகவூர் மெயின் ரோட்டில் கண் துடைப்பாக நடந்த பணி

தளவாய்புரம்: செட்டியார்பட்டி வழியே செல்லும் முகவூர் சேத்துார் மெயின் ரோட்டில் குழாய் பதிப்பிற்கு பின் ரோடு பராமரிப்பு பணிகள் கண்துடைப்பாக நடந்துள்ளதால் தினமும் வாகன ஓட்டிகள் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.செட்டியார்பட்டி வழியே சேத்துாருக்கு முகவூர் வழியாக சொல்லும் மெயின் ரோட்டில் தொடர்ந்து குடிநீர் குழாய் உடைப்பால் ரோடு சேதமானதுடன் ஒவ்வொரு முறையும் பராமரிப்பும் அதனால் ஏற்படும் தாமதத்தால் மக்கள் பாதிப்பிற்கு உள்ளாகினர். பல ஆண்டுகளாக தொடர்ந்த இப் பிரச்சனைக்கு கடந்த ஆண்டு காமராஜர் சிலை அருகில் இருந்து முத்துச்சாமிபுரம் வரை உடைப்பெடுத்த ரோட்டில் பழைய குழாய்களை தோண்டி பாரம் தாங்கும் விதமாக புது குழாய்களை பதித்தனர். ஏற்கனவே உள்ள பேவர் பிளாக் ரோட்டை சரி செய்யாமல் மேடு பள்ளங்களுடன் பணிகளை முடித்துள்ளனர். இதனால் தினமும் பயணிக்கும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் லோடு லாரிகள், பஸ்கள் மேடு பள்ளங்களுடன் பயணிக்க வேண்டி உள்ளது. இது குறித்து சரவணன்: குழாயை மாற்றி அமைத்து ரோட்டை சமமாக சீரமைப்பதாக தகவல் தெரிவித்தும் பெயரளவிற்கு மட்டும் பணிகளை முடித்துள்ளனர். இதனால் தினமும் நெல் மூடை, நுால், ஆயத்த ஆடை கொண்டு செல்லும் லாரிகள், பஸ்கள், நோயாளிகள், டூவீலர்களில் செல்வோர் பாதிப்பை சந்திக்கின்றனர். அனைவரும் பயணிக்கும் மெயின் ரோடு சாலையை முறையாக செப்பனிட வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ