உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / சஸ்பெண்டை எதிர்த்து அமைச்சர் வீட்டிற்கு ஊர்வலமாக செல்ல முயன்றவர்கள் கைது

சஸ்பெண்டை எதிர்த்து அமைச்சர் வீட்டிற்கு ஊர்வலமாக செல்ல முயன்றவர்கள் கைது

காரியாபட்டி, : மல்லாங்கிணரில் சஸ்பென்டை எதிர்த்து அமைச்சர் தங்கம் தென்னரசு வீட்டிற்கு மனு கொடுக்க ஊர்வலமாக செல்ல முயன்ற தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை ஊழியர் சங்கத்தினர் கைது செய்யபட்டனர்.நரிக்குடி மறையூர் கிராமத்தில் சில தினங்களுக்கு முன் எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.6 லட்சம் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்ட நிழற்குடையை அமைச்சர் தங்கம் தென்னரசு திறந்து வைத்தார். 2 நாட்களில், அடியில் சென்ற தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்ட குழாய் உடைந்து, நிழற்குடை தரைதளம் வழியாக தண்ணீர் பொங்கியது. இது குறித்து தினமலர் நாளிதழில்செய்தி வெளியானது.இது தொடர்பாக நரிக்குடி பி.டி.ஓ., ராஜசேகரன், இளநிலைப் பொறியாளர் பிரபா சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை ஊழியர் சங்க பணியாளர்கள் பணிகளைப் புறக்கணித்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று மல்லாங்கிணரில் உள்ள அமைச்சர் தங்கம் தென்னரசுவின் வீட்டிற்கு தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை ஊழியர் சங்க பணியாளர்கள், பேரூராட்சி அலுவலகத்தில் இருந்து ஊர்வலமாக சென்று அமைச்சரை சந்தித்து மனு அளிக்க முயன்றனர்.இதையடுத்து அமைச்சர் வீட்டிற்கு ஊர்வலமாக செல்ல முயன்றவர்களிடம், போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். உடன்பாடு எட்டப்படவில்லை. போலீசாருக்கும், ஊழியர் சங்க பணியாளர்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனையடுத்து போலீசார் அவர்களை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்