உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / நாளை காமிக்ஸ் திருவிழா

நாளை காமிக்ஸ் திருவிழா

விருதுநகர்: ராஜபாளையத்தில் நாளை (பிப்.15) காமிக்ஸ் திருவிழா நிகழ்ச்சியில் கலந்து கொள்ள விரும்பும்குழந்தைகள் பதிவு செய்து கொள்ளலாம் என கலெக்டர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.அவரது செய்திக்குறிப்பு: இதில் 5 முதல் 14 வயது வரை உள்ள குழந்தைகள் கலந்து கொள்ளலாம். இதில் கேலி சித்திரம், முகமுடி தயாரித்தல் போட்டி, நாடகம், உடை அலங்காரம், பொம்மலாட்டம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது. இந்த காமிக்ஸ் திருவிழா நிகழ்ச்சியில் பங்கு பெற விரும்பும் 5 முதல் 14 வயது வரை உள்ள குழந்தைகள், அவர்கள் பள்ளி பயிலும் பள்ளியை அணுகி பதிவு செய்து கொள்ளலாம், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ