சுற்றுலா விருதுகள் விண்ணப்பிக்க அழைப்பு
விருதுநகர் : கலெக்டர் சுகபுத்ரா செய்திக்குறிப்பு: சுற்றுலாத்துறை மூலம் சிறந்த உள் வரும் பயண முகவர், உள்நாட்டு பயண முகவர், பயண பங்குதாரர், விமான நிறுவன பங்குதாரர், தங்கும் விடுதி, ஓட்டல், சிறந்த சுற்றுலாத்தலம், சுற்றுலா அமைப்பாளர்கள், வழிகாட்டி, விளம்பரங்கள் என 14 வகைப்பாடுகளில் சுற்றுலா விருதுகள் வழங்கப்படுகிறது. மாவட்டத்தில் உள்ள சுற்றுலா சார்ந்த தொழில் முனைவோரிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் இணைய வழி மூலமாக விண்ணப்பிக்க கடைசி நாள் செப். 15. தேர்ந்தெடுக்கப்படுவோருக்கு சென்னையில் நடக்கும் உலக சுற்றுலா தின விழாவில் வழங்கப்படும். விவரங்களுக்கு மாவட்ட சுற்றுலா அலுவலர் முனியப்பனை 73977 15688 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றார்.