உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / ஸ்ரீவி., திருவண்ணாமலை கோயிலுக்கு டவுன் பஸ்

ஸ்ரீவி., திருவண்ணாமலை கோயிலுக்கு டவுன் பஸ்

ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் திருவண்ணாமலை சீனிவாசபெருமாள் கோயிலுக்கு சென்று வர வசதியாக சிவகாசி, ராஜபாளையத்திலிருந்து டவுன் பஸ்கள் இயக்க வேண்டும்என பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.இக்கோயிலுக்கு திருத்தங்கல், சிவகாசி, ராஜபாளையம், தளவாய்புரம், ஆலங்குளம் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வந்து செல்கின்றனர்.இந்நிலையில் ஸ்ரீவில்லிபுத்துாரில் இருந்து காலை, மாலை நேரங்களில் பள்ளி மாணவர்களுக்காக மட்டும் ஒரு அரசு டவுன் பஸ் இயங்குகிறது. மற்ற நேரங்களில் மினி புஸ்களையும், ஆட்டோக்களையும் நம்பி மக்கள் பயணிக்கின்றனர்.எனவே, சிவகாசி, ராஜபாளையம் நகரங்களில் இருந்து திருவண்ணாமலை சீனிவாச பெருமாள் கோயிலுக்கு நேரடியாக டவுன் பஸ்கள் இயக்க வேண்டுமென அப்பகுதி பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ