தொழிற்சங்க வாயிற்கூட்டம்
விருதுநகர் : சம்பள பேச்சுவார்த்தையை உடனே துவக்குவது, ஓய்வூதியர்களின் நிலுவையை உடனே வழங்குவது, காலிப்பணியிடங்களை நிரப்புவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விருதுநகரில் அரசு போக்குவரத்து பணிமனை முன்பு அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் வாயிற்கூட்டம் நடந்தது. மத்திய சங்க மாவட்ட தலைவர் திருப்பதி தலைமை வகித்தார். ஏ.ஐ.டி.யு.சி., மண்டல பொதுச்செயலாளர் பாண்டியன், பணியாளர் சம்மேளன மண்டல பொதுச்செயலாளர் ராமசாமி, ஓய்வூதியர் நல அமைப்பு மாவட்ட தலைவர் வேலுச்சாமி, மண்டல பொதுச்செயலாளர் போஸ், சி.ஐ.டியு., மண்டல பொதுச்செயலாளர் வெள்ளதுரை பேசினர்.