விருதுநகரில் வணிகர் விழிப்புணர்வு கூட்டம்
விருதுநகர்: விருதுநகரில் தமிழ்நாடு வணிகர் நல வாரிய உறுப்பினர் சேர்க்கை சிறு, குறு வணிகர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. கலெக்டர் சுகபுத்ரா தலைமை வகித்து பேசியதாவது: வணிகவரித்துறை சார்பில் பதிவு பெற்ற, பெறாத வணிகர்கள் ஆண்டிற்கு வரவு செலவு ரூ.40 லட்சத்திற்கு குறைவாக உள்ள வணிகர்கள் வணிகர் நல வாரியத்தின் பலனை பெறும் வகையில் உறுப்பினர் ஆகலாம். சேர்க்கை கட்டணத் தொகையான ரூ.500ஐ செலுத்த நவ. 30 வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. மெயில், அலைபேசி எண், பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம், முகவரிச் சான்று, தொழில் உரிமம் சான்று உள்ளிட்ட விவரங்களை அளித்து உறுப்பினராக சேர்ந்து கொள்ளலாம். விபரங்களுக்கு சிவகாசி துணைஆணையர் (மாநில வரி) அலுவலகத்தை அணுகலாம் என்றார். கூடுதல் ஆணையர் தேவேந்திர பூபதி, விருதுநகர் கோட்ட இணை ஆணையர்(மாநில வரி) மாரியப்பன், விருதுநகர் துணை ஆணையர்(மாநில வரி) மகபூப் இப்ராகிம், விருதுநகர் உதவி ஆணையர்(மாநில வரி) செல்வ பிரியா உட்பட பலர் கலந்து கொண்டனர்