உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் /  போக்குவரத்து நெருக்கடி; இலவச கழிப்பறை, நிழற்குடை இல்லை

 போக்குவரத்து நெருக்கடி; இலவச கழிப்பறை, நிழற்குடை இல்லை

ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் பஸ் ஸ்டாண்டில் புதிய கடைகள் கட்டும் பணிக்காக பழைய கடைகள் இடிக்கப்பட்ட நிலையில் இலவச கழிப்பிடம், நிழற்குடை, இருக்கை வசதிகள் இல்லாமலும், தாறுமாறாக நிறுத்தப்படும் வாகனங்களால் போக்குவரத்து நெருக்கடி போன்ற சிரமங்களால் பயணிகள் சிரமப்பட்டு வருகின்றனர். நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள இந்த பஸ் ஸ்டாண்டின் கிழக்கு பகுதியில் உள்ள கடைகள் இடிக்கப்பட்டு தற்போது புதிய கடைகள் கட்டுமான பணி நடந்து வருகிறது. இதில் பஸ் ஸ்டாண்டில் இருந்த கட்டணமில்லா கழிப்பிடம், கிழக்கு பகுதி நிழற்குடை, இருக்கை வசதிகள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது கட்டுமான பணிகள் நடந்து வரும் நிலையில் பஸ்கள் வந்து செல்வதில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. கட்டணமில்லா கழிப்பிடம் இடிக்கப்பட்டதால் பயணிகள், வியாபாரிகள் தற்போது கட்டணக் கழிப்பிடத்தை பயன்படுத்த வேண்டிய நிலைக்கு ஆளாகியுள்ளனர். கிழக்குப் பகுதியில் வத்திராயிருப்பு பஸ்களில் நிற்கும் இடத்திலிருந்த நிழற்குடை இடிக்கப்பட்டதால் மக்கள் வெயிலில் தான் நிற்க வேண்டி உள்ளது. மாலை நேரங்களில் கடைகளை மறைத்து நிற்கின்றனர். பஸ் ஸ்டாண்டில் உட்பகுதியில் போதிய அளவிற்கு இருக்கை வசதி இல்லாததால் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். தாய்மார்கள் பாலூட்டும் அறையும் அப்புறப்படுத்தப்பட்டதால் குழந்தையுடன் வரும் பெண்கள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இத்தகைய குறைகளை சரி செய்ய நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஸ்ரீவில்லிபுத்தூர் மக்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ