உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / குறுக்கே வந்த நாயால் சோகம் கார் - தனியார் பஸ் மோதல் நான்கு பேர் காயம்

குறுக்கே வந்த நாயால் சோகம் கார் - தனியார் பஸ் மோதல் நான்கு பேர் காயம்

விருதுநகர்: விருதுநகர் அருகே குறுக்கே வந்து இறந்த நாயை காரை நிறுத்தி பார்த்த போது, பின்னால் வந்த தனியார் பஸ் மோதியதில் 10 வயது சிறுமி உட்பட 4 நான்கு பேர் காயமடைந்தனர். விருதுநகர் அருகே பட்டம்புதுார் விலக்கில் மதுரையைச் சேர்ந்த ராமலட்சுமி 37, தனது குடும்பத்துடன் திருநெல்வேலி நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது ரோட்டின் நடுவே நாய் ஒன்று குறுக்கே வந்தது. ராமலட்சுமி பிரேக்கை அழுத்த முயன்றும் மோதியதில் நாய் இறந்துள்ளது. காரை நிறுத்தி இறந்த நாயைபார்த்து கொண்டிருந்த போது பின்னால் வந்த தனியார் பஸ் மோதியதில் கார் தலைகீழாக கவிழ்ந்து, ராமலட்சுமி 37, அப்பாவுராஜ் 67, மனைவி சித்ரா 57 மற்றும் 10 வயது சிறுமி என 4பேர் காயமடைந்தனர். வச்சக்காரப் பட்டி போலீசார்விபத்தில் கவிழ்ந்த காருக்குள் சிக்கியவர்களை மீட்டு விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி