உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / மானாமதுரை வழியில் மாற்றப்பட்ட ரயில் மதுரைக்கு ரயிலின்றி தவிக்கும் மக்கள்

மானாமதுரை வழியில் மாற்றப்பட்ட ரயில் மதுரைக்கு ரயிலின்றி தவிக்கும் மக்கள்

ஸ்ரீவில்லிபுத்துார்:செங்கோட்டையிலிருந்து விருதுநகர், மதுரை, திண்டுக்கல் வழியாக செல்லும் மயிலாடுதுறை ரயில் பராமரிப்பு பணி காரணமாக மானாமதுரை வழியாக வழித்தடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளதால் தென்காசி, விருதுநகர் மாவட்ட மக்கள் காலை நேரத்தில் மதுரை வருவதற்கு ரயிலின்றி தவிக்கின்றனர். செங்கோட்டையில் இருந்து விருதுநகர் வழியாக மயிலாடுதுறை செல்லும் ரயிலில் தினமும் 1000-க்கும் மேற்பட்ட தென்காசி, விருதுநகர் மாவட்ட மக்கள் மது ரைக்கு பயணித்து வந்தனர். வேலை முடிந்து மாலை 5: 15 மணிக்கு வரும்மயிலாடுதுறை ---செங்கோட்டை ரயிலின் மூலம் சொந்த ஊர் திரும்புவர். திண்டுக்கல் -- திருச்சி இடையே நடக்கும் பராமரிப்பு பணி காரணமாக, இந்த மாதம் முழுவதும் இந்த ரயில் விருதுநகர், அருப்புக்கோட்டை, மானாமதுரை, சிவகங்கை, தேவகோட்டை, காரைக்குடி, புதுக்கோட்டை, கீரனூர், திருச்சி, தஞ்சாவூர் வழியாக மயிலாடுதுறை செல்கிறது. இதனால் தினமும் மதுரை சென்று வரும் தென்காசி, விருதுநகர் மாவட்ட பயணிகள் தவிக்கின்றனர். இந்த பராமரிப்பு பணிகள் மேலும் ஒருசில மாதங்கள் நீட்டிக்க படலாம் என ரயில்வே துறையினர் கூறுகின்றனர். எனவே செங்கோட்டையிலிருந்து தினமும் மதுரை வரை மட்டுமாவது தனியாக ஒரு ரயில் இயக்க தெற்கு ரயில்வே நிர்வாகம் முன்வர வேண்டும் என விருதுநகர், தென்காசி மாவட்ட மக்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி