உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் /  ரயில் கட்டண உயர்வை வாபஸ் பெற வேண்டும்

 ரயில் கட்டண உயர்வை வாபஸ் பெற வேண்டும்

சாத்துார்: நாடாளுமன்ற கூட்டத் தொடர் நடந்து முடிந்த பின்னர் ரயில் கட்டண உயர்வை மத்திய அரசு அறிவித்துள்ளது. இது கண்டனத்துக்குரியது. ரயில் கட்டண உயர்வை வாபஸ் பெற வேண்டும், என மாணிக்கம் தாகூர் எம்.பி தெரிவித்தார். சாத்துார் நான்கு வழிச்சாலையில் படந்தால் ஜங்ஷன் மேம்பாலம் கட்டும் பணியை ஆய்வு செய்த அவர் மேலும் கூறியதாவது: சாத்துார் படந்தால் ஜங்ஷனில் சாலையின் அடியில் உள்ள குடிநீர் குழாய்கள் மாற்றி அமைக்கப்பட்டு விட்டால், ஜனவரி மாதத்தில் பாலம் கட்டும் பணி துவங்கி ஜூன் மாதத்தில் முடிவடையும். இ. டி., ஊழல் வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் மட்டுமே பா.ஜ.,வுடன் கூட்டணி வைத்துள்ளார்கள். சாத்துாரில் இருக்கன்குடி ரோட்டில் ரயில்வே மேம்பாலம் அமைப்பதில் நெடுஞ்சாலைத் துறைக்கும், அப்பகுதி வியாபாரிகளுக்கும் கருத்து வேறுபாடு உள்ளது. இரு தரப்பினருக்கும் உடன்பாடு ஏற்பட்டு விட்டால் விரைவில் பணிகள் துவங்க மத்திய ரயில்வே அமைச்சரிடம் வலியுறுத்துவேன். சென்னை, கோயம்புத்துார் எக்ஸ்பிரஸ் ரயில்கள் சாத்துாரில் நின்று செல்ல மத்திய ரயில்வே அமைச்சரிடம் தொடர்ந்து வலியுறுத்தப்படும்., என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ