உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / காமராஜ் கல்லுாரியில் பயிற்சி பட்டறை

காமராஜ் கல்லுாரியில் பயிற்சி பட்டறை

விருதுநகர்; விருதுநகர் காமராஜ் பொறியியல் தொழில்நுட்ப கல்லுாரியில் ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்காக 'பணியிடத்திற்கான பாதுகாப்பான புத்திசாலித்தனமான திறன் வளர்த்தல்' பயிற்சி பட்டறை நடந்தது. இதில் பணியாளர்களுக்கு எம்.எஸ்.வேர்ட், எக்செல், பவர் பாயின்ட் போன்றவற்றை எளிமையாக கையாளுவதற்கான பயிற்சிகள், இணைய குற்றங்களில் இருந்து நம்மை பாதுகாத்து கொள்வதற்கான வழிமுறைகள், செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பத்தை நாம் பயன்படுத்துவதற்கான தேவைகள் போன்ற தலைப்புகளில் பயிற்சிகளும், நடனம், பாட்டு, யோகா தனித்திறன்களை வெளிப்படுத்துதல் போன்றவையும் நடந்தன.நிறைவு விழாவில் கல்லுாரியின் முதல்வர் செந்தில், செயலாளர் தர்மராஜன், பொருளாளர் ஸ்ரீமுருகன் பேசினர். இணை பேராசிரியர் கீதா வரவேற்றார். உதவி பேராசிரியர் காயத்ரி நன்றிகூறினார். பங்கேற்ற அனைவருக்கும் சான்றுகள் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை