உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் /  மரக்கன்று நடும் விழா

 மரக்கன்று நடும் விழா

ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் மாவட்ட சட்டப் பணி ஆணை குழு, வனத்துறை, ஊரக வளர்ச்சித்துறை சார்பில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடந்தது. முதன்மை மாவட்ட நீதிபதி ஜெயக்குமார் தலைமை வகித்து மரக்கன்றுகள் நடும் பணியை துவக்கி வைத்தார். உதவி வன பாதுகாவலர் ஞானப்பழம் முன்னிலை வகித்தார். விழாவில் நீதிபதிகள் மணி, சுதாகர், புஷ்பராணி, வீரணன் ,சார்பு நீதிபதி அகிலா தேவி, ரத்தினவேல் பாண்டியன், சுந்தர காமேஷ் மார்த்தாண்டம், அபர்ணாதேவி, அபிலா, சுபாஷினி, வழக்கறிஞர்கள் நீதிமன்ற ஊழியர்கள், தன்னார்வலர்கள் பங்கேற்றனர். நீதிமன்ற வளாகத்தில் 65க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப் பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை