உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / மலையேற்ற திட்டம் நாளை முதல் நடைமுறை

மலையேற்ற திட்டம் நாளை முதல் நடைமுறை

விருதுநகர் : ஸ்ரீவில்லிபுத்துார் மேகமலை புலிகள் காப்பகம், வனச்சரக எல்கைக்கு உட்பட்ட பகுதியில் அறிவிக்கப்பட்ட மலையேற்றத் திட்டத்தை மாவட்ட நிர்வாகம் நாளை(நவ. 3) முதல் நடைமுறைப்படுத்துகிறது.இத்திட்டம் தமிழகத்தின் வனம், வன உயிரினப் பகுதிகளில் நிலையான முறையில் மலையேற்றம் செய்வதை ஒரு நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வரும் தமிழ்நாடு வன அனுபவக் கழகம் மற்றும் தமிழ்நாடு வனத்துறையின் கூட்டு முன்னெடுப்பில் உருவாக்கப்பட்டுள்ளது.இயற்கை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தவும் வனப்பகுதியை ஒட்டியுள்ள உள்ளூர் மக்களுக்கு நிலையான வாழ்வாதாரத்தை ஏற்படுத்தவும், வனம், வன உயிரின பாதுகாப்பிற்கு வலுசேர்க்கும் விதமாக இந்த மலையேற்றத் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதை தொடர்ந்து நவ. 1 முதல் www.trektamilnadu.comஎன்ற தளத்தில் முன்பதிவு நடந்து வருகிறது. தற்போது மலையேற்ற திட்டம் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய கிழமைகளில் நடக்கும்.அதனடிப்படையில் மாவட்டத்தில் கலெக்டர் ஜெயசீலன் நாளை காலை 7:00 மணிக்கு செண்பகத்தோப்பு முதல் வ.புதுப்பட்டி வரை 9 கி.மீ துாரம் உள்ள மலையேற்ற திட்டத்தை நடைமுறைப்படுத்த உள்ளார். இதில் மக்கள், அரசு ஊழியர்கள், சமூக ஆர்வலர்கள் அனைவரும் கலந்து கொள்ளலாம் என மேகமலை புலிகள் காப்பக துணை இயக்குநர் தேவராஜ் தெரிவித்துள்ளார்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ