உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / கிராமங்களில் நடமாடும் வாகனம் மூலம் காசநோய் பரிசோதனை, சிகிச்சை வசதி

கிராமங்களில் நடமாடும் வாகனம் மூலம் காசநோய் பரிசோதனை, சிகிச்சை வசதி

சிவகாசி: சிவகாசி பகுதியில் காசநோய் தடுப்பு திட்டத்தின் கீழ் அனைத்து கிராமங்களிலும் காச நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நடமாடும் வாகனம் மூலம் ஆலோசனை, சிகிச்சை, அளிக்கப்பட்டு வருகின்றது.மாவட்ட சுகாதாரத்துறை காசநோய் தடுப்பு பிரிவின் சார்பில் காசநோய் தடுப்பு திட்டத்தின் கீழ் சிவகாசி பகுதியில் 100 நாட்கள் நடமாடும் வாகனம் மூலம் காச நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆலோசனை சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதற்காக காசநோய் எளிதில் தொற்றக்கூடிய சர்க்கரை, ரத்த அழுத்தம் உள்ளவர்கள், சளி பாதிப்பு உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.காசநோய் உள்ளதா என்பதை கண்டறிவதற்காக வெளியில் அலையாமல் நடமாடும் வாகனத்திலேயே எக்ஸ்ரே பார்க்கப்படுகிறது. லேசான சளியால் பாதிக்கப்பட்டவர்கள் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கும் கூடுதல் சளியால் பாதிக்கப்பட்டவர்கள் தாலுகா மருத்துவமனைகளுக்கும், அதிகமாக பாதிக்கப்பட்டவர்கள் விருதுநகர் மருத்துவ கல்லுாரி மருத்துவ மனைக்கும், ராஜபாளையம், அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கும் பரிந்துரைக்கப்படுவர்.இது குறித்து சிவகாசி மாவட்ட சுகாதார அலுவலர் கலுசிவலிங்கம் கூறுகையில், சிவகாசி பகுதியில் ஒவ்வொரு கிராமத்திற்கும் நேரடியாக சென்று நடமாடும் வாகனம் மூலம் காசநோய் குறித்து பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதற்காக 100 நாட்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. தங்கள் கிராமத்திற்கு வரும்போது அங்குள்ள மக்கள் இதனை பயன்படுத்திக் கொள்ளலாம், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ