உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / நாய்கள் கடித்து இரு மான்கள் பலி

நாய்கள் கடித்து இரு மான்கள் பலி

விருதுநகர்: விருதுநகர் அருகே பட்டம்புதுாரில் நேற்று காலையில் நாய்கள் கடித்து இரு ஆண் மான்கள் பலியாயின. விருதுநகர் அருகே பட்டம்புதுார் காலனி பகுதியில் நேற்று காலை இரு ஆண் மான்கள் திரிந்தன. இவற்றை அப்பகுதியில் உள்ள தெருநாய்கள் துரத்தி சென்ற கடித்தன. அப்பகுதியினர் தெருநாய்களை விரட்டினர். ஆனால் படுகாயமடைந்த இரு மான்களும் பலியாயின. வனத்துறையினர் ஸ்ரீவில்லிப்புத்துார் அலுவலகத்திற்கு பலியான இரு மான்களை கொண்டுச்சென்றனர். பரிசோதனையில் ஒரு மானுக்கு இரு வயதும், மற்றொன்றுக்கு மூன்று வயதானது தெரிந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ