உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / வெவ்வேறு சமுதாயங்களை சேர்ந்த இருவர் தற்கொலை

வெவ்வேறு சமுதாயங்களை சேர்ந்த இருவர் தற்கொலை

சாத்துார்:ஆலங்குளம் அருகே இருவர் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். விருதுநகர் மாவட்டம், ஆலங்குளம் அடுத்த கரிசல்குளத்தை சேர்ந்தவர் முத்து பாண்டி மகன் ஆகாஷ், 22, எலக்ட்ரீஷியன். இவரும் அதே பகுதியை சேர்ந்த, 15 வயது சிறுமியும் காதலித்ததாக கூறப்படுகிறது. இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதனாலும், சிறுமிக்கு காதலிக்கும் வயது இல்லாததாலும், இவர்களின் பெற்றோர் இவர்களின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். நேற்று, சிறுமியின் வீட்டில் யாரும் இல்லை என்பதை அறிந்த ஆகாஷ், அந்த சிறுமியின் வீட்டிற்கு சென்றார். நேற்று மதியம், 1:00 மணிக்கு வெளியில் சென்றிருந்த சிறுமியின் பெற்றோர் வீட்டிற்கு வந்து போது, வீடு பூட்டி கிடந்தது. கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது, சிறுமி மற்றும் ஆகாஷ் துாக்கிட்டு இறந்து கிடந்தனர். ஆலங்குளம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை