உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / இரு விபத்துக்களில் இருவர் பலி

இரு விபத்துக்களில் இருவர் பலி

விருதுநகர்: விருதுநகரில் இருவேறு டூவீலர் விபத்துக்களில் அல்லம்பட்டியைச் சேர்ந்த தினேஷ் குமார் 21, மதுரை கள்ளிக்குடியைச் சேர்ந்த சுகுமார் 25, ஆகியோர் சம்பவயிடத்திலேயே பலியாகினர். ஊரகப் போலீசார் விசாரிக்கின்றனர்.விருதுநகர் அல்லம்பட்டியைச் சேர்ந்தவர் தினேஷ் குமார். இவர் உணவு டெலிவரி செய்யும் நிறுவனத்தில் பணிபுரிகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு 9:00 மணிக்கு டூவீலரில் (ஹெல்மட் அணிந்திருந்தார்) உணவு டெலிவரி கொடுப்பதற்காக பொதுப்பணித்துறை ஆய்வு மாளிகை அருகே நான்கு வழிச்சாலையில் சத்திரரெட்டியப்பட்டி நோக்கி சென்றார். அப்போது பின்னால் வந்த லாரி மோதியதில் தினேஷ் குமார் சம்பவயிடத்திலேயே பலியானார்.இதே போல மதுரை மாவட்டம் கள்ளிக்குடி அண்ணாநகரைச் சேர்ந்தவர் சுகுமார் 25. இவர் வெல்டிங் தொழில் செய்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் மாலை 5:00 மணிக்கு சித்துார் சென்று வருவதாக பெற்றோரிடம் தெரிவித்து விட்டு சென்றவர் இரவு வீடு திரும்பவில்லை. இவர் நேற்று காலை 7:00 மணிக்கு ஆவல்சூரன்பட்டி அருகே வாய்க்காலில் இறந்து கிடப்பது, அவ்வழியாக தோட்டத்துக்கு சென்றவர்கள் மூலம் தெரியவந்தது.இது குறித்து போலீசாரின் விசாரணையில், வாய்க்கால் பாலம் ரோட்டில் வளைவு பகுதியில் டூவீலரில் சுகுமார் திரும்பிய போது நிலை தடுமாறி தடுப்புச்சுவரில் மோதி வாய்க்கால் உள்ளே விழுந்து இறந்திருக்காலம் என தெரிந்துள்ளது. இந்த இரு விபத்துக்கள் குறித்தும் விருதுநகர் ஊரகப்போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ