மேலும் செய்திகள்
கொடிக்கம்பங்கள் அகற்றம்
24-Apr-2025
ராஜபாளையம்: விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே மேல குன்னக்குடியைச் சேர்ந்தவர் வைரம் 58. இவரது மனைவி வீரலட்சுமி 55. நேற்று காலை இருவரும் 10 வயது பேரன் கமலேசுடன் ராஜபாளையத்திற்கு டூவீலரில் சென்றனர். ராஜபாளையம் சங்கரன் கோவில் ரோடு புது பஸ் ஸ்டாண்ட் அருகே சென்ற போது ஸ்ரீவில்லிபுத்துாரில் இருந்து திருநெல்வேலி சென்ற சரக்கு வேன் டூவீலர் மீது மோதியது. இதில் வீரலட்சுமி, கமலேஷ் இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாயினர். காயமடைந்த வைரம் ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். வேன் டிரைவர் திருநெல்வேலியைச் சேர்ந்த மாய பெருமாள் 31, மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
24-Apr-2025