ஒன்றிய அலுவலகங்கள் முற்றுகை
ஸ்ரீவில்லிபுத்துார் : வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியம் கான்சாபுரம் ஊராட்சியில் 100 நாள் வேலை திட்டத்தை முறையாக வழங்காததை கண்டித்து மக்கள் நேற்று மதியம் 1:00 மணிக்கு ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.நடப்பு ஆண்டு முடிவடையவுள்ள நிலையில் 20 நாட்கள் மட்டுமே வேலை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் மற்ற நாட்கள் வழங்கப்படவில்லை, இதுகுறித்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி மக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். நீண்ட நேரம் காத்திருந்த அவர்களிடம் பி.டி.ஓ.,க்கள் உட்பட எந்த அதிகாரியும் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. இதனால் கான்சாபுரம் மக்கள் அதிருப்தி அடைந்தனர்.* பூவாணி ஊராட்சி அருந்ததியர் குடியிருப்பு பகுதியில் சுகாதார வளாகம் கட்டுவதில் காலதாமதம் ஏற்படுவதை கண்டித்து ஸ்ரீவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், கிராம மக்கள் மார்க்சிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் சசிகுமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அவர்களிடம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பேச்சுவார்த்தை நடத்தி, சுகாதார வளாகம் கட்டித்தர நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.