தேசிய சுகாதார குழுமத்தில் காலிப்பணியிடங்கள்
விருதுநகர்; கலெக்டர் ஜெயசீலன் செய்திக்குறிப்பு:தேசிய சுகாதார குழுமத்தில் மாவட்ட சுகாதார சங்கம் மூலம் முற்றிலும் தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் கீழ்கண்ட பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.தொழில்சார் உளவியலாளர், நடத்தை சிகிச்சைக்கான சிறப்பு கல்வியாளர், சமூக பணியாளர் ஆகியபணியிடங்களை நிரப்புவதற்கு தேவையான தகுதிகள் இனசுழற்சி ஒதுக்கீடு, விண்ணப்பப்படிவம் ஆகியவை குறித்த விவரத்தை http://virudhunagar.nic.inஎன்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.நிரப்பப்பட்ட விண்ணப்பங்களை மாவட்ட நலவாழ்வு சங்கம், மாவட்ட சுகாதார அலுவலகத்தில் நேரிலோ அல்லது தபால் வழியாகவோ மே 9க்குள் விண்ணப்பிக்க வேண்டும், என்றார்.