வைத்தியநாத சுவாமி கோயில் வைகாசி தேரோட்டம்
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் மடவார் வளாகம் வைத்தியநாத சுவாமி கோயிலில் வைகாசி திருவிழாவை முன்னிட்டு தேரோட்ட திருவிழா நடந்தது.இதை முன்னிட்டு நேற்று அதிகாலை 5:00 மணிக்கு மேல் பிரம்ம முகூர்த்தத்தில் திருத்தேர்களுக்கு வைத்தியநாதசுவாமி, சிவகாமி அம்பாள் எழுந்தருளினர். திருத்தேரில் ரகுபட்டர் சிறப்பு பூஜைகள் செய்தார். பின் காலை 8:30 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்து இழுக்கும் நிகழ்ச்சி துவங்கியது.ஆண், பெண் பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். நான்கு ரத வீதியை சுற்றி வந்து தேர் நிலையம் அடைந்தது. அப்போது பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை தக்கார் சக்கரையம்மாள், செயல் அலுவலர் முத்து மணிகண்டன், கோயில் பட்டர்கள், ஊழியர்கள் செய்திருந்தனர்.