மேலும் செய்திகள்
பொங்கல் விழா கொடியேற்றம்
04-Jun-2025
ராஜபாளையம்: ராஜபாளையம் அருகே சொக்கலிங்கபுரம் முத்துமாரியம்மன் கோயில் வைகாசி பவுர்ணமி திருவிழாவை முன்னிட்டு பத்து வயது சிறுவனை அம்மனாக வழிபட்டனர்.ராஜபாளையம் அருகே சத்திரப்பட்டி ரோட்டில் சொக்கலிங்காபுரம் முத்துமாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. வைகாசி பவுர்ணமி திருவிழா ஜூன் 3ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று முன்தினம் இரவு 10:00 மணிக்கு பூஜை பெட்டி, அம்மன் உருவம் ஊர்வலமாக எடுத்து வந்து கோயிலுக்கு கொண்டு வரப்பட்டு திருவிழா துவங்கியது. 10 வயது சிறுவனை அம்மனாக பாவித்து பக்தர்கள் வழிபாடு நடத்தினர். அதன்பின் தீச்சட்டி, ஆயிரம் கண் பானை, முளைப்பாரி, பால்குடம், கயர் குத்து பொங்கலிட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர். இரவு கோயில் கிணற்றில் அம்மன் உருவம் கரைக்கப்பட்டு விழா நிறைவு பெற்றது. ஏற்பாடுகளை ஊர் தலைவர் முத்து வைரவன், செயலாளர் விஜயகரன், பொருளாளர் தவமணி கண்ணன் செய்தனர்.
04-Jun-2025