உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / வேணுகோபாலசாமி கோயிலில் வைகாசி வசந்த விழா

வேணுகோபாலசாமி கோயிலில் வைகாசி வசந்த விழா

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை அருகே பாலையம்பட்டி வேணுகோபாலசாமி கோயிலில் வைகாசி வசந்த விழா கொடியேற்றத்துடன் துவங்கியது.நேற்று முன் தினம் மாலை மங்கள இசை முழங்க கொடி ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கொடியேற்றம் நடந்தது. கொடி மரத்திற்கும், பலி பீடத்திற்கும் மஞ்சள், தயிர், இளநீர் உள்ளிட்ட 11 வகையான அபிஷேகங்கள் நடந்தது. உற்ஸவருக்கு தீப ஆராதனை நடந்தது. முக்கிய நிகழ்வாக ஜூன் 6 திருக்கல்யாணமும், ஜூன் 9 தேரோட்டமும் நடக்கிறது. தேரோட்ட நிகழ்ச்சிக்கு உள்ளூர் வெளியூர்களில் இருந்து பக்தர்கள் கலந்து கொள்வர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ