உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / வத்திராயிருப்பு முத்தாலம்மன் கோயில் தேரோட்டம்

வத்திராயிருப்பு முத்தாலம்மன் கோயில் தேரோட்டம்

வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு முத்தாலம்மன் கோயில் தேரோட்ட திருவிழா நேற்று நடந்தது. ஏராளமான பக்தர்கள் தேரினை வடம் பிடித்து இழுத்தனர்.வத்திராயிருப்பு முத்தாலம்மன் கோயில் தேரோட்ட திருவிழா அக்.1ல் வடக்கு வாசல் செல்வி அம்மன், முத்தாலம்மன் மது பொங்கல் சாட்டுதலுடன் துவங்கியது. முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று முன்தினம் இரவு அம்மன் தேருக்கு எழுந்தருளலுடன் துவங்கி, நேற்று மதியம் முடிந்தது.நேற்று அதிகாலை 3:00 மணிக்கு தேரில் அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு தேரோட்டம் துவங்கியது. ஏராளமான பக்தர்கள்தேரினை வடம் பிடித்து இழுத்தனர். நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று தேர் மதியம் 3:00 மணிக்கு நிலையம் சேர்ந்தது. பக்தர்கள் அம்மனை மேளதாளம் முழங்க ஊர்வலமாக எடுத்துச் சென்று கோயிலில் எழுந்தருள செய்தனர். அங்கு உருவச் சிலைகளை காணிக்கை செலுத்தி, மஞ்சள் நீர் ஊற்றி நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர்.மாலையில் மஞ்சள் நீராட்டும், இரவில் மாவிளக்கு ஊர்வலமும், பின்னர் அம்மன் பிரியாவிடை நிகழ்ச்சியும் நடந்தது. அப்போது ஏராளமான பக்தர்கள் பூக்களைத் தூவியும், குலவையிட்டும் அம்மனை வழிபட்டனர்.ஸ்ரீவில்லிபுத்துார் டி.எஸ்.பி. ராஜா தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை