முருக பக்தர்கள் மாநாட்டிற்கு செல்லும் வேல், சேவல்
அருப்புக்கோட்டை: மதுரையில் இன்று நடக்கும் முருக பக்தர்கள் மாநாட்டிற்கு அருப்புக்கோட்டையில் இருந்து பா.ஜ.,வினர் வேல் மற்றும் சேவலை வாலசுப்பிரமணியர் கோயில் பூஜை செய்து கொண்டு சென்றனர்.விருதுநகர் கிழக்கு மாவட்ட தலைவர் பாண்டுரங்கன் கலந்து கொண்டார். ஏற்பாடுகளை மாவட்ட கிழக்கு மாவட்ட செயலாளர் ராஜலட்சுமி, பொதுச் செயலாளர் சீதாராமன், நகர தலைவர் மாரிமுத்து மற்றும் நிர்வாகிகள் செய்தனர்.