விஜய் தனித்து தான் போட்டியிடுவார்
சிவகாசி : ''விஜய் எந்த கூட்டணிக்கும் வரப்போவதில்லை தனித்து தான் போட்டியிடுவார் ,'' என சிவகாசியில் மாணிக்கம் தாகூர் எம்.பி.,கூறினார். சிவகாசி வளர்ச்சிதிட்டங்களை தொடங்கி வைத்த மாணிக்கம்தாகூர் எம்.பி., கூறியதாவது, நடிகர் விஜயை தேர்தல் முடிவுக்குப் பின்னர் தான் அவரை மக்கள் ஏற்றுக்கொள்கிறார்களா இல்லையா என்பது தெரியவரும். தமிழகத்தில் கூட்டம் கூடுவதற்கும், ஓட்டிற்கும் எந்த சம்மந்தமுமில்லை. அவர் வருகையால் எங்கள் கூட்டணிக்கு எவ்வித பாதிப்புமில்லை. அவர் எந்தக் கூட்டணிக்கும் வர போவதில்லை. அவர் தனித்து தான் போட்டியிடவுள்ளார், அவரைத் தேடியும் யாரும் போகவில்லை. சீமான் திட்டாத ஆளே கிடையாது. முதலில் காங்கிரஸ், தி.மு.க.., அ.தி.மு.க., பா.ஜ.,என அனைத்து அரசியல் கட்சியினர்களையும் திட்டியுள்ளார். அவரை பெரும்பான்மையான மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள், என்றார். அசோகன் எம்.எல்.ஏ., மேயர் சங்கீதா, கவுன்சிலர்கள், கட்சியினர் அலுவலர்கள் உடனிருந்தனர்.