உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / பஸ் ஸ்டாண்டில் இருந்து புறப்படும் மினிபஸ்கள் கிராம மக்கள் வரவேற்பு

பஸ் ஸ்டாண்டில் இருந்து புறப்படும் மினிபஸ்கள் கிராம மக்கள் வரவேற்பு

ஸ்ரீவில்லிபுத்துார், : ஸ்ரீவில்லிபுத்துார் தாலுகாவில் பல்வேறு கிராமங்களில் இருந்து நகரத்துக்கு இயக்கப்பட்ட மினி பஸ்கள் தற்போது பஸ் ஸ்டாண்டில் இருந்து புறப்படும் வகையில் வழித்தடம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளதால் கிராம மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.மம்சாபுரம், நிறைமதி, துரைச்சாமிபுரம், பெருமாள் தேவன்பட்டி ஆகிய பகுதிகளில் இருந்து புறப்பட்டு பல்வேறு கிராமங்கள் வழியாக ஸ்ரீவில்லிபுத்துாருக்கு மினி பஸ்கள் இயக்கப்பட்டது. இந்த பஸ்கள் பஸ் ஸ்டாண்டுக்குள் செல்ல அனுமதி இல்லாத நிலையில் நகரில் பல்வேறு இடங்களில் நிறுத்தி பயணிகளை ஏற்றிச் சென்றனர். இதனால் கிராமப்புற மக்கள் அரசு மருத்துவமனை, காய்கறி மார்க்கெட், தனியார் மருத்துவமனைக்கு வந்து செல்ல மிகுந்த சிரமப்பட்டனர்.இந்நிலையில் மினி பஸ்கள் வழித்தடம் மாற்றி அமைக்க அரசு அனுமதி அளித்துள்ள நிலையில் நிறைமதி, துரைச்சாமிபுரம், மம்சாபுரம் பகுதி பஸ்கள் தற்போது பஸ் ஸ்டாண்டில் இருந்து இயங்கத் துவங்கியுள்ளது. இதுபோல் தற்போது பெருமாள் தேவன்பட்டியில் இருந்து இயங்கும் மினி பஸ்களும் விரைவில் பஸ் ஸ்டாண்டில் இருந்து புறப்படவுள்ளது. இதனை கிராமப்புற மக்கள் வரவேற்றுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ