மக்களைத் தேடி மருத்துவம் விருதுநகர் மாவட்டம் முதலிடம்
விருதுநகர்:தமிழகத்தில் மக்களைத்தேடி மருத்துவம் திட்டத்தில் நீரிழிவு நோய்க்கு சிறப்பான சிகிச்சை வழங்கி விருதுநகர் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது.தமிழகத்தில் ஊரகப்பகுதிகளில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் வீடுகளுக்கே சென்று தொற்றா நோய்களான ரத்த அழுத்தம், நீரிழிவு நோய்களை கட்டுப்படுத்த 45 வயது, அதற்கு மேல் உள்ள நோயாளிகள், நடக்க இயலாதவர்களுக்கு பெண் தன்னார்வலர்கள் மூலமாக மருந்துகள் வழங்கப்படுகிறது.மேலும் இல்லத்தில் வழங்கக்கூடிய நோய் ஆதரவு சிகிச்சை சேவைகள் செவிலியர் மூலம் வழங்குதல், இயன்முறை மருத்துவ சிகிச்சை, சிறுநீரக நோயாளிகளை பராமரிக்க சுய டயாலிசிஸ் செய்வதற்கான பைகள் வழங்குதல், குடும்பத்தில் பிறவிக் குறைபாடுள்ள குழந்தைகள், வேறு ஏதேனும் உடல்நலத் தேவைகள் உள்ள குழந்தைகளை அடையாளம் காண்பது போன்ற பிற பரிந்துரைகள் வழங்கப்படுகிறது.2024ல் மக்களைத்தேடி மருத்துவம் திட்டத்தில் நீரிழிவு நோய்க்கு சிறப்பான சிகிச்சை வழங்கி தமிழகத்தில் விருதுநகர் மாவட்டம் முதல் இடத்தை பிடித்துள்ளது. இதற்கான சான்றிதழை பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம் விருதுநகர் மாவட்ட சுகாதாரத்துறை அலுவலர் யசோதாமணியிடம் வழங்கினார்.