7 வயது குழந்தைக்கு மூளைக்காய்ச்சல் காப்பாற்றிய விருதுநகர் அரசு மருத்துவர்கள்
விருதுநகர்: செம்பட்டியைச் சேர்ந்த 7 வயது குழந்தைக்கு மூன்றாவது முறையாக மூளைக்காய்ச்சல் அறிகுறிகளுடன் விருதுநகர் அரசு மருத்துமவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அறுவை சிகிச்சை செய்து அரசு மருத்துவர்கள் காப்பாற்றியுள்ளனர். வத்திராயிருப்பு அருகே செம் பட்டியைச் சேர்ந்தவர்கள் தம்பதி களான மணிகண்டன், ராஜேஸ்வரி. இவர்களின் 7 வயது மகன் மூன்றாவது முறையாக மூளைக்காய்ச்சல் அறிகுறிகளுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் விருதுநகர் அரசு மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டார். இவருக்கு டீன் ஜெயசிங் தலைமையில் குழந்தைகள் நலப் பிரிவு டாக்டர்கள் அரவிந்த்பாபு, சங்கீத் ஆகியோர் மூளைக்கும், மூக்கின் பின்பகுதிக்கும் இடைப்பட்ட எலும்பு பகுதியில் துவாரம் இருப்பதை எம்.ஆர்.ஐ., பரி சோதனையில் கண்டறிந்தனர். மூளை அறுவை சிகிச்சை நிபுணர் கணபதி வேல் கண்ணன் தலைமையிலான மருத்துவக்குழுவினர் குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்து மண்டை ஓட்டின் அடிப்பகுதியில் உள்ள துவாரத்தை அடைத்தனர். இந்த பாதிப்பிற்கு மூளையில் இருந்து நாசி வழியாக செல்லும் திரவக்கசிவு மூளைக்காய்ச்சல் தொடர்ந்து ஏற்பட காரணமாக இருந்தது. இந்த மூளைக்கசிவு நோய் என்ற அரிய வகை பாதிப்பை அறுவை சிகிச்சை மூலமாக சரிசெய்யப் பட்டதால் தற்போது முழு நலனுடன் குழந்தை வீடு திரும்புயுள்ளார் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.