உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / பட்டாசு தொழிலாளியை கொன்ற வாட்ச்மேன் கைது

பட்டாசு தொழிலாளியை கொன்ற வாட்ச்மேன் கைது

விருதுநகர்:விருதுநகர் அருகே ஓ.கோவில்பட்டியில் தனியார் பட்டாசு ஆலை வளாகத்தில் தொழிலாளி பழனிமுருகனை 43, கொன்ற வாட்ச்மேன் நந்தீஸ்வரனை 66, போலீசார் கைது செய்தனர். ஓ.கோவில்பட்டியைச் சேர்ந்தவர் பழனிமுருகன். இவர் தனியார் பட்டாசு ஆலையில் தங்கி பணிபுரிந்து வந்தார். இவர் ஜூலை 20 இரவில் மது அருந்தியதால் சகோதரர் டூவீலரில் அழைத்து வந்து ஆலை வளாகத்தில் விட்டு சென்றார். ஜூலை 21 காலை 7:45 மணிக்கு ஆலை வளாகத்திற்கு பணிக்கு வந்த சக தொழிலாளர்கள் பார்த்த போது தகர செட்டில் கட்டிலில் பழனிமுருகன் காயங்களுடன் இறந்து கிடந்தார். ஆமத்துார் போலீசார் இரவு வாட்ச்மேன், டூவீலரில் வந்து இறக்கி விட்ட சகோதரரிடம் விசாரித்தனர். ஓ.கோவில்பட்டியைச் சேர்ந்த வாட்ச்மேன் நந்தீஸ்வரனை 66, பழனிமுருகன் மது அருந்தி வந்து அடிக்கடி தகாத வார்த்தையால் திட்டியுள்ளார். ஜூலை 20 இரவில் வாட்ச்மேன் மது வாங்கி வரச்சொல்லி கொடுத்த பணத்தில் மது அருந்தி வந்த பழனி முருகன், வாட்ச்மேனிடம் தகராறில் ஈடுபட்டதால் ஆத்திரத்தில் கட்டையால் தாக்கியதில் சம்பவயிடத்திலேயே பழனிமுருகன் பலியானது தெரிந்தது. நந்தீஸ்வரனை ஆமத்துார் போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை