உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / மூன்று நாட்களாக பெய்து வரும் மழை கண்மாய்களுக்கு நீர் வரத்து துவக்கம்

மூன்று நாட்களாக பெய்து வரும் மழை கண்மாய்களுக்கு நீர் வரத்து துவக்கம்

விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் 180.40 மி.மீ., மழை பதிவானது.கடந்த மூன்று நாட்களாக பெய்து வரும் மழையால் கண்மாய்களுக்கு நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. வளிமண்டல சுழற்சி காரணமாக மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.அதிகபட்சமாக ராஜபாளையம் 54 மி.மீ., வத்திராயிருப்பு 49 மி.மீ., பெரியாறு பிளவக்கல் 33.40 மி.மீ., சிவகாசி 19 மி.மீ., வெம்பக்கோட்டை 9 மி.மீ., சாத்துார் 7 மி.மீ., ஸ்ரீவில்லிபுத்துார் 5.40 மி.மீ., விருதுநகர் 3.60 மி.மீ., என மொத்தம் 180.40 மி.மீ., மழை பெய்தது. சராசரியாக 15.03 மி.மீ., மழை பதிவானது.திருச்சுழி, காரியாப்பட்டி, கோவிலங்குளம், அருப்புக்கோட்டையில் மழையில்லை. நேற்று காலை முதலே மேகங்களுக்கு இடையில் வெயில் கண்ணாமூச்சி ஆடிய நிலையில் மதியத்திற்கு மேல் விருதுநகர், சாத்துாரில் கருமேகம் சூழ்ந்து பலத்த மழை பெய்தது. மாலையில் மேகமூட்டத்துடன் குளிர்ந்த காற்று வீசியதால் இதமான சூழல் காணப்பட்டது.

கண்மாய்களுக்கு நீர் வரத்து

இதில் செண்பகத் தோப்பு பேயனாற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மம்சாபுரத்தில் உள்ள முதலியார்குளம், வேப்பங்குளம் கண்மாய்களுக்கு தண்ணீர் வரத்து ஏற்பட்டது. வாழைக்குளம் கண்மாய் மறுகால் விழும் நிலையை எட்டியது. ஸ்ரீவில்லிபுத்துார் நாகர் பகுதியில் பெய்த கனமழையால் வைத்தியநாதசுவாமி கோயில், வடபத்ர சயனர் சன்னதியில் தண்ணீர் தேங்கியது.பிளவக்கவல் பெரியாறு அணையில் 28 அடி உயரத்திற்கு தண்ணீர் உள்ள நிலையில் 33.4 மி.மீட்டர் மழை பெய்ததில் அணைக்கு வினாடிக்கு 130 கன அடி தண்ணீர் வரத்து ஏற்பட்டது.கோவிலாறு அணையில் 20 அடி உயரத்திற்கு தண்ணீர் உள்ள நிலையில் 38.6 மி.மீட்டர் மழை பெய்தது. வத்திராயிருப்பில் 49 மி.மீ., மழை பதிவாகியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி