அணைகள், கண்மாய்களில் வெயிலால் குறையும் நீர்மட்டம்
வத்திராயிருப்பு: பிளவக்கல் பெரியாறு, கோவிலாறு அணைகள், கண்மாய்களில் நீர்மட்டம் நாளுக்கு நாள் குறைந்து வருவதால் வத்திரா யிருப்பு தாலுகா விவ சாயிகள் கவலை அடைந்துள்ளனர். வத்திராயிருப்பு தாலுகா வில் கான்சாபுரம், அத்தி கோயில், கூமா பட்டி, கொடிக்குளம், சேது நாராயணபுரம், நெடுங்குளம், வத்திராயிருப்பு, தம்பிபட்டி பகுதிகளில் நெல் சாகுபடி ஆண்டு தோறும் அதிகளவில் நடப்பது வழக்கம். இதற்கு பிளவக்கல் பெரியாறு, கோவிலாறு அணைகள், 40-க்கும் மேற்பட்ட கண்மாய்களில் உள்ள தண்ணீர் பேருதவியாக இருக்கும். நடப்பாண்டில் போதிய அளவிற்கு மழை இல்லாததால் அணைகள் மட்டும் நிரம்பிய நிலையில் பெரும்பாலான கண்மாய்களுக்கு முழு அளவில் தண்ணீர் வரவில்லை. இந்நிலையில் தற்போதே வெயிலின் தாக்கம் துவங்கியுள்ளதால் அணைகள், கண்மாய்களில் நீர்மட்டம் குறைய துவங்கியுள்ளது. 47.56 அடி உயரம் உள்ள பிளவக்கல் அணையில் தற்போது 26.08 உயரத் திற்கே தண்ணீர் உள்ளது. 42.65 அடி உயரம் உள்ள கோவில் அணையில் 16.31 அடி உயரத்திற்கு மட்டுமே தண்ணீர் உள்ளது. மேலும் கூமாபட்டி, கொடிக்குளம், அத்தி கோயில், கான்சாபுரம் கண்மாய்களில் தண்ணீர் குறைந்த அளவே உள்ளது. இதனால் கோடைக்கால நெல் சாகுபடிக்கு போதியளவிற்கு தண்ணீர் கிடைக்குமா என விவ சாயிகள் கவலை அடைந்துள்ளனர்.