மேலும் செய்திகள்
மரக்கடையில் தீ விபத்து
20 minutes ago
கலெக்டர் உதவியாளர் மாற்றம்
31 minutes ago
கோயில் அருகில் கொட்டப்படும் குப்பை: பக்தர்கள் முகம் சுளிப்பு
31 minutes ago
இளநிலை வருவாய் ஆய்வாளர்கள் இடமாற்றம்
1 hour(s) ago
விருதுநகர் : கலெக்டர் ஜெயசீலன் செய்திக்குறிப்பு: விருதுநகரில் கால்நடை துறை சார்பில் கோழிகளுக்கான வெள்ளைக் கழிச்சல் நோய் தடுப்பூசி முகாம் பிப். 1 முதல் 14 வரை நடைபெறுகிறது. ஒவ்வொரு ஆண்டும் கோடை காலத்திற்கு முன் பிப். ல் வெள்ளைக்கழிச்சல் தடுப்பூசி முகாம்களை தொடர்ந்து நடத்தி வருகிறது.கோழிகள், பண்ணைக்கோழிகள், வாத்துகள், வான்கோழிகளை வைரஸ் கிருமியால் உண்டாக்கப்படும் வெள்ளைக் கழிச்சல் நோய் தாக்குகிறது. கோழிகள் தீவனம் உண்ணாமை, சோர்ந்து போய் இருத்தல், வெள்ளைக் கழிச்சல், வெள்ளை நிறத்தில் வயிற்றுப்போக்கு ஏற்படுதல், நரம்பு தளர்ச்சி ஏற்பட்டு கோழிகள் நடக்க இயலாமல் போகும் ஆகியவை அறிகுறிகள் ஆகும்.இந்நோய் ஏற்பட்டால் அதிகளவில் பொருளாதார இழப்பு நேரிடும். மாவட்டத்திற்கு 1.68 லட்சம் டோஸ் மருந்துகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 115 கால்நடை மருத்துவ நிலையங்களிலும், சிறப்பு முகாம்களிலும் தடுப்பூசிப்பணி நடக்க உள்ளது. இதில் பங்கேற்று கோழி வளர்ப்போர் பயனடையலாம், என்றார்.
20 minutes ago
31 minutes ago
31 minutes ago
1 hour(s) ago