உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / அரசு மருத்துவமனைகள், அலுவலகங்களில் ஓ.ஆர்.எஸ்., கரைசல் விநியோகிக்கப்படுமா

அரசு மருத்துவமனைகள், அலுவலகங்களில் ஓ.ஆர்.எஸ்., கரைசல் விநியோகிக்கப்படுமா

விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் அதை மக்கள் எதிர்கொள்ளும் விதமாக அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அலுவலகங்களில் ஓ.ஆர்.எஸ்., கரைசல் விநியோகம் செய்ய வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மழை பெய்ததால் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியது. இதனால் வெப்பம் தணிந்து வெயிலின் தாக்கம் தெரியாமல் போனது. ஆனால் மழை முடிந்தவுடன் வெயிலின் தாக்கம் அதிகரிக்க துவங்கியது.மேலும் பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு தற்போது தேர்வுகள் நடந்து வருகிறது. கர்ப்பிணிகள், வயதானோர், பெண்கள் பகலில் வெளியே செல்வதற்கே அஞ்சுகின்றனர். இதனால் பணிக்கு சென்று வருபவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.அக்னி நட்சத்திரம் துவங்குவதற்கு வெயில் வாட்டி வதைப்பதால் சுபநிகழ்ச்சிகளுக்கு செல்வதை கூட தவிர்க்கும் நிலை ஏற்பட்டுள்ளது. பகலில் வெளியே வருபவர்கள் மோர், இளநீர், சர்பத் ஆகிய குளிர்ந்த ஆகாரங்களை பருகுகின்றனர்.இந்நிலையில் மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அலுவலகங்களில் ஓ.ஆர்.எஸ்., கரைசல் விநியோகிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதன் மூலம் அதிகரித்து வரும் வெப்ப நிலையை எதிர்கொள்ள முடியும். இந்த கரைசலை மக்களுக்கு தெரியும் படி வெளிப்பகுதியில் வைத்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.மேலும் கர்ப்பிணிகள், பெண்கள், வயதானவர்கள், குழந்தைகளை வெயிலின் தாக்கத்தில் இருந்து பாதுகாத்துக் கொள்வது குறித்த ஆலோசனைகளை மாவட்ட நிர்வாகம் வெளியிட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ