உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / இடிக்கப்படுமா  சேதம் அடைந்த அரசு கட்டடங்கள்...  புதியவை கட்டும் பணிகளும் தொய்வு

இடிக்கப்படுமா  சேதம் அடைந்த அரசு கட்டடங்கள்...  புதியவை கட்டும் பணிகளும் தொய்வு

அருப்புக்கோட்டை: விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றியங்களுக்கு கட்டுப்பட்ட பல ஊராட்சிகளில் அரசு கட்டடங்கள் பல ஆண்டுகளாக சேதம் அடைந்த நிலையில் அவற்றை இடிக்காமல் இருப்பதால் மழைக்காலத்திற்குள் விழுந்துவிடும் அபாயம் உள்ளது. அதே போல் புதிய கட்டடங்கள் கட்டுவதில் தொய்வும் ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு ஊராட்சி ஒன்றிய கிராமங்களில் அங்கன்வாடி மையங்கள், சுகாதார வளாகங்கள் புது கழிப்பறைகள் மேல்நிலைத் தொட்டிகள் உள்ளிட்டவை ஒவ்வொரு ஆண்டும் கட்டப்பட்டு வருகிறது. ஏற்கனவே பல ஊராட்சிகளில் கட்டி பல ஆண்டுகளான நிலையில் சேதமாகி மோசமான நிலையில் உள்ளன. பல ஆண்டுகளாக இப்படியே இருப்பதால் அனைத்தும் விழும் அபாயத்தில் உள்ளது. மழை காலம் துவங்கும் நிலையில், சேதமடைந்த அரசு கட்டடங்களை இடிக்க வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மெத்தனம் காட்டுகின்றனர். குல்லூர்சந்தை, செம்பட்டியில் அங்கன்வாடி மையங்கள், பெரியவள்ளி குளத்தில், மேல்நிலை தொட்டி உள்ளிட்டவை பல ஆண்டுகளாக இடிக்கப்படாமல் உள்ளன. இந்த ஊர்களில் புதியதாக கட்டடங்கள் கட்ட டெண்டர் விடப்பட்டுள்ளது. பழைய கட்டடங்களை இடிக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி தராததால், வேறு இடங்களை பார்ப்பதில் தாமதம் ஏற்படுவதால் பணிகளில் தொய்வு ஏற்படுகிறது. மாவட்ட நிர்வாகம் மழைக்காலத்திற்குள் பழைய கட்டடங்களை இடிக்க அனுமதி கொடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி